|
|
 |
| |
|
எம்மைப் பற்றி... |
உள்நோக்கி ஒரு பயணம்….
அன்புடன்!
இது ஒரு பயணம்!
உள்நோக்கி ஒரு பயணம்….
இருளிலிருந்து ஒளி நோக்கி...
ஒரு நீர்த்தூளி…
சமுத்திரமாக…
முகிழ் இல்லா…
வானவெளியை நோக்கி…
இதுவரை நாம் சென்றதும்,…
இன்று சென்றுகொண்டிருப்பதும்…
பிரங்க்ஞையற்ற
இயத்திரத்தனமான
வெளி நோக்கிய பயணம்.
நாம் அறிவோம் அனைத்தும்…
நமக்கு வெளியே…
ஒரு கையளவு என்பதை அறியாது…
மனிதர்கள், பொருட்கள், விஞ்ஞானம்,
அரசியல், இனவாதம், கம்ய+னிஸம்…
அனைத்தும்; அறிவோம்.
புதிதாக அறிவதற்கு என்ன உள்ளது?
அழிவிற்கான அணைத்தும் அறிவோம்.
கண்டுபிடிக்கின்றோம்
உலகை ஏழுதரம் அழிக்கவல்ல
அணு ஆயுதம் வரை…
நமக்குள்ளே நாம் அறிவோமா?
நான் யார்?
எனக்கும் இந்த பிரபஞ்ஞத்திற்கும்
என்ன தொடர்பு..
எனக்கும் பிற மனிதர்களுக்கும்
என்ன உறவு..
பல விளக்கங்கள் அளிப்போம்
பல வியாக்கியானங்கள் வழங்குவோம்.
மேலும் பல தத்துவங்கள் பேசுவோம்
அனைத்தும் பிற நூல்களில் வாசித்தவை..
பிறரிடமிருந்து கேட்டவை..
சொந்த அனுபவம்…?
சொந்த அறிவு….?
நம்மை அறிதல்
நம்மை மாற்றும்
உள் மாற்றம்
வெளி மாற்றங்களுக்குகான
முதற்படி..
இதுவே ஓசோ காண்பிக்கும் புது வழி.
பிரங்க்ஞை!
என் ஒளி!
என்னையே எனக்கு அடையாளம் காட்ட…
நான் யார்? என்பதை புரியவைக்க…
இருளிலிருந்து வெளியே வர…
ஆழந்த தூக்கத்திலிருந்து விழித்தெழ…
எனது சகல செயற்பாடுகளையும்
பொறுப்பானதாக மாற்ற…
ஆக்கபூர்வமாக படைக்க...
என் பிரங்க்ஞை வழிநடத்துகின்றது
பிரங்க்ஞையான வாழ்வு
மானுடத்தின் பரிணாம வளர்ச்சிக்கான வழி…
பிரங்க்ஞையான பயணமே
ஆனந்தமான வாழ்விற்கும்
விடியலுக்குமான பாதை
இது கண்டவர்கள் அனுபவித்தவர்கள் கூறியது.
பிரங்க்ஞை எனும் இச் சஞ்சிகை…
புதிதாய் பூக்கும் ஒரு பூ...
கருவிலிருந்து பிறந்து
மொட்டாகி பூவாகி…
நறுமணம் பரப்ப வருகின்றது..
மணந்து இன்பூறுங்கள்...இன்னுமொரு மலர்
நம் “பிரங்க்ஞை” இலிருந்து மலரும் வரை…
ஏன் இந்த மலர்?
“எனக்கு ஒன்றுமே தெரியாது.
என்பது மட்டும் எனக்குத் தெரியும்”
இது சோக்கிரட்டிஸ் இரண்டாயிரத்தி ஐந்நூறு
வருடங்களுக்கு முன்பு கூறியது.
ஆனால் இன்றும் பொருந்துகின்றது.
உண்மையைத் தேடி அலைபவர்களுக்கு…
கூறியது? கேட்டது? அறிந்தது?
எல்லாம் சொற்களால் அழங்கரிக்கப்பட்ட
வெறும் வார்த்தை வர்ணங்கள்.
இந்த வர்ணங்களில் சிக்குண்டு கட்டுண்டு வெளியேற
முடியாது தவிக்கின்றோம.;
எவ்வாறு வெளியே வருவது?
எனத் தேடியபோது…
ஓசோ! என்ற சமுத்திரத்தைக் கண்டேன்
குதித்தேன். முழ்கினேன்.
ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கின்றேன்.
சுவைத்ததோ ஒரு துளி…
அது தந்த நிறைவில்
தங்களுடன் பகிர்ந்துகொள்ள வருகின்றேன்.
நாம் பலதும் பேசுகின்றோம்;,
ஆனாலும் பேசாதுவிடும் விடயங்கள் பல
சக்தி! …பிரங்க்ஞை!
காமம்! …காதல்! உறவு?…குழந்தைகள்!
மனம்?…பண்பாடு?…கலை?… கலாசாரம்?
பெண்!..பெண்மை!…ஆண்!…ஆண்மை!
விடுதலை?…சுதந்திரம்?…..தியானம்!
இப்படிப் பல….
ஓசோவின் வழிகாட்டலில்
புதிய பார்வையில்… பாதையில்…
இவற்றைப் பேச ஆரம்பித்துவைக்கின்றது
பிரங்க்ஞை எனும் இந்த மலர்;.
இவ் விடயங்;கள் தொடர்பான
உங்கள் ஆய்வுகள் கருத்துக்கள்
பிறரிடமிருந்து பெற்றவை
சொந்த அனுபவத்தில் பெற்றவை
தர்க்கத்தின் அடிப்படையில் பெற்றவை ..
அனைத்தையும் எழுதுங்கள்.
பிரங்க்ஞையின் ஒளியில்
ஒவ்வொருவரும் அவரவர்
பாதைகளில் பயணிப்போம்
விடியல் நோக்கி.. ..
புதிய பாதையில் தவழும் குழந்தை நான்.
நம்பிக்கையுடன் நடை பயில முயற்சிக்கின்றேன்
ஏழு ஆண்டுகள் தவழ்ந்து வந்த பாதை இது.
இந்த உடலுக்கோ நீண்ட தூரம்…
இயற்கைக்கோ இரண்டடி கூட இல்லை இது.
இச் சிறு தூரத்தில் நறுமணம் தந்த
மலர்கள் பல…
இதை பகிர்ந்து கொள்வதற்கான
ஒரு முயற்சியே இந்த மலர்
உங்களுக்கு நம்பிக்கையும்
சிறு ஓளிக் கீற்றும் தெரிந்தால்
நன்றி கூறுங்கள்
ஓசோ என்ற ஞானிக்கு..
புரியவுமில்லை ஓளியுமில்லை எனில்
தவறு என்னுடையது
என் புரிதலில் ஆழம் காணாது..
மீண்டும் முயற்சிக்கின்றேன்
ஆழமாகச் சென்று அறிந்து..
மீண்டும் வருகின்றேன்…
புதிய புர்pதலுடன்….
இந்த மலர்! ஒரு சுட்டுவிரல் மட்டுமே…
நிலவைக் காண்பது அவரவர் பொறுப்பு.
சொந்த அனுபவம் பெற முயற்சித்துப் பாருங்கள்
இப் பயணத்தை
புதிய பார்வையில்…பாதையில்…
அனைவரையும் மதிக்கும்
ஆனந்தமயமான பாதை….
ஆழகான பாதை…
இது ஒரு புதிய பாதையல்ல…
நாம் மறந்துபோன பாதை…
மீண்டும் பயணிப்போம்….
vks மீராபாரதி
|
| |
|
 |
| |
| |
|
| |
| Copyrights © 2007. All Rights Reserved to "Awakening
Awareness". |
 |
|
முதற்பக்கம் |
எம்மைப்பற்றி |
தொடர்புகள் |
உங்கள் கருத்து
|
|
| விளம்பரங்கள் |
 |
|
|
|
|
|
|
|
|
|
| |
|